இன்று முதல் இயக்கப்பட இருந்த திருச்செந்தூர் - பொள்ளாச்சி ரயில் ரத்து :

By செய்திப்பிரிவு

பொள்ளாச்சி - மதுரை அகல ரயில்பாதை பணிகள் நிறைவடைந்த பின்னர், கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து பொள்ளாச்சி, உடுமலை, பழநி, மதுரை வழியாக திருச்செந்தூருக்கு தினமும் பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வந்தது. கரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன. மீண்டும் திருச்செந்தூருக்கு ரயில் இயக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து, டிசம்பர் 15-ம் தேதி (இன்று) திருச்செந்தூரிலிருந்து பொள்ளாச்சிக்கும், நாளை முதல் பொள்ளாச்சியில் இருந்து திருச்செந் தூருக்கும் ரயில் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்திருந்தது. இந்நிலையில், இந்த ரயில் போக்குவரத்து மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து, பொள்ளாச்சி பகுதி பொதுமக்கள் கூறும்போது, ‘‘ஆனைமலை, பழநி, மதுரை, திருப்பரங்குன்றம், நெல்லை மற்றும் திருச்செந்தூர் ஆகிய பிரசித்தி பெற்ற கோயில்களை உள்ளடக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் உள்ள இந்த ரயில் சேவை மீண்டும் தொடங்கப்படாதது வேதனை அளிக்கிறது” என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்