புதுப்பட்டினம் அருகே, இருளர் மக்கள் வசிக்கும் ஐந்துகாணி பகுதியில் இல்லம் தேடி கல்வித் திட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த, வாயலூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஐந்துகாணி இருளர் குடியிருப்பு மற்றும் காரைத்திட்டு தொடக்கப் பள்ளியில் இல்லம் தேடி கல்வித் திட்டம் தொடர்பான விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நேற்று நடைபெற்றன.
காரைத்திட்டு தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பவானி, பெற்றோர்-ஆசிரியர் கழகத் தலைவர் கிங் உசேன் ஆகியோர் சிறப்புஅழைப்பாளர்களாகப் பங்கேற்றனர்.
இதில், ஏராளமான மாணவ, மாணவிகள் பங்கேற்று, பாடம், செயல்முறை பயிற்சிகளைப் பெற்றன. ஐந்துகாணி இருளர் குடியிருப்பு மக்களுக்கும் கல்வி தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த உள்ளதாக ஆசிரியகள் தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில், சமூக ஆர்வலர்கள் மற்றும் இருளர் மக்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago