ஆவடி சிஆர்பிஎப் வளாகத்தில்மாற்றுத் திறனாளிகள் பங்கேற்ற சிறப்பு ஃபேஷன் ஷோ :

By செய்திப்பிரிவு

ஆவடி சிஆர்பிஎப் வளாகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு ஃபேஷன் ஷோ நடைபெற்றது.

ஆவடி சிஆர்பிஎப் மற்றும் திமான் திவ்யகா என்ற மாற்றுத்திறனாளிகளுக்கான அறக்கட்டளை சார்பில், ஆவடி சிஆர்பிஎப் வளாகத்தில் நேற்று முன் தினம் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு பேஷன் ஷோ நடைபெற்றது.

மாற்றுத் திறனாளிகளை ஊக்குவிக்கும் வகையில் நடைபெற்ற இந்த பேஷன் ஷோவில், ஆவடிசிஆர்பிஎப் டிஐஜி தினகரன், கம்போடியா நாட்டின் சர்வதேச நட்புறவு இயக்குநர் சிராஜுதீன், முன்னாள் எம்பி மற்றும் எம்எல்ஏவுமான ராம்தாஸ், கின்னஸ் சாதனையாளரும், திமான் திவ்யகா அறக்கட்டளை நிறுவனருமான ஷோபனா திமான் மற்றும் 50-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளி குழந்தைகள், சிஆர்பிஎஃப் உயரதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்த சிறப்பு பேஷன் ஷோவில், தேசிய அளவில் நடைபெற்ற வீல்சேர் கூடைப்பந்து மற்றும் பாரா ஒலிம்பிக்-ல் பங்கேற்ற தடகள வீரர்கள், கடந்த 2018-ம் ஆண்டு புதுச்சேரி கடற்பகுதியில் சுமார் 5 கிமீ தூரம் தனது கைகளை மட்டும்பயன்படுத்தி நீச்சல் அடித்து சாதனை படைத்த மாற்றுத் திறனாளியான ஸ்ரீராம் உள்ளிட்டோர் மும்பை மாடல்களுடன் கேட் வாக் செய்து அசத்தினர்.

மேலும், இந்த பேஷன் ஷோவில், 'பிக்பாஸ்’ புகழ் சம்யுக்தா, மெர்சல் திரைப்பட குழந்தை நட்சத்திரம் அக்ஸ்த் ஆகியோரும், மாற்றுத் திறனாளிகளுடன் கேட் வாக் செய்து, அவர்களை உற்சாகப்படுத்தினர்.

விளையாட்டுகளில் சாதனை புரிந்த மாற்றுத் திறனாளிகளுக்கு கவுரவ விருதுகள் வழங்கப்பட்டன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்