சிதம்பரம் நகரில் உள்ள கான்சாகிப் வாய்க்கால் கரையோரம் நேரு நகர், அம்பேத்கர் நகர் குடியிருப்பு கள் உள்ளன. இதில் நேருநகர் பகுதியில் 68 வீடுகளும், அம்பேத்கர் நகர் பகுதியில் 96 வீடுகளும் உள்ளன. இந்த 164 வீடுகளும் நீர்வழி ஆக்கிரமிப்பில் உள்ளதாக கூறி சிதம்பரம் நகராட்சி மற்றும் வருவாய்த் துறையினர் குடியிருப்புவாசிகளுக்கு நோட்டீஸ் வழங்கி இருந்தனர். நீதிமன்ற உத்தரவின்படி இந்த குடியிருப்புகளை விரைவில் காலி செய்ய வேண்டும் என பலமுறை கால அவகாசம் தரப்பட்ட நிலையில், இன்னும் ஒரு வாரத்தில் இந்த குடியிருப்புகள் இடிக் கப்பட உள்ளன.
இந்நிலையில் மாற்று இடம் தரப்படாமல் நீர்வழி ஆக்கிரமிப்புகளை அகற்றி குடியிருப்புகளை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் நேற்று கோட்டாட்சியர் அலுவலகத்தின் வாயிலில் அமர்ந்து நீதி கேட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அடுப்பு பாத்தி ரங்கள் மற்றும் காஸ் சிலிண்டர் உடன் போராட்டக் களத்திற்கு அருகிலேயே சமையல் செய்ய தொடங்கி னர். இதையடுத்து முக்கிய நிர்வாகிகளை சிதம்பரம் கோட்டாட்சியர் ரவி, வட்டாட்சியர் ஆனந்த் ஆகியோர் அலுவலகத்திற்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். மாற்று இடம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago