புதுச்சேரி முத்தியால்பேட்டை விஸ்வநாதன் நகரைச் சேர்ந்தவர் நாகஜோதி, கட்டிட தொழிலாளி. இவரது கணவர் 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில் 2 மகன்களுடன் அப்பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இவரது மகன் ஈஸ்வரன் (15). கோட்டக்குப்பத்தில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். நீண்ட நாட்களாக பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்ததால் மீண்டும், பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் அங்கு செல்ல விருப்பமில்லாமல் இருந்ததாக தெரிகிறது. இதையடுத்து அவருக்கு தாய் மற்றும் உறவினர்கள் அறிவுரை கூறி கடந்த 3 தினங்களாக ஈஸ்வரனை பள்ளிக்கு அனுப்பியுள்ளனர். நேற்று முன்தினம் பள்ளிக்கு செல்வதாக வீட்டிலிருந்து புறப்பட்ட ஈஸ்வரன் சிறிது நேரத்தில் வீடு திரும்பியதாக கூறப்படுகிறது.
பின்னர் வீட்டில் யாரும் இல்லாத வேலையில் அங்குள்ள அறையில் புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீஸார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வீட்டின் அறையை சோதனையிட்டபோது ஈஸ்வரன் தற்கொலை செய்வதற்கு முன்பு எழுதிய கடிதம் சிக்கியது. அதைக்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago