புதுச்சேரி மின்துறையை தனியார் மயமாக்க வரைவு அறிக்கை அரசிடம் அளிப்பு :

By செய்திப்பிரிவு

புதுச்சேரி மின்துறையை தனியார் நிறுவனமாக மாற்றுவதற்கான வரைவு அறிக்கையை மத்திய அரசால் நியமிக்கப்பட்ட ஆலோசனை நிறுவனம் டெலாய்ட் புதுச்சேரி அரசுக்கும், துறைக்கும் அளித்துள்ளது.

புதுச்சேரி மின்துறையை தனியார் மயமாக்கும் மத்திய அரசு உத்தரவை ஊழியர்கள் எதிர்க்கின்றனர். மின்துறை செயலர் ஏற்பாடு செய்திருந்த இரு நாள் கூட்டத்தையும் ஊழியர்கள் புறக்கணித்தனர். மின்துறையை தனியார்மயமாக்கக் கூடாது என்று பல கட்சிகளும் ஊழியர்களுக்கு ஆதரவாக உள்ளன. இந்நிலையில் மின்துறையை தனியார் நிறுவனமாக மாற்றுவதற்கான வரைவு அறிக்கை அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசால் நியமிக்கப்பட்ட ஆலோசனை நிறுவனமான டெலாய்ட் புதுச்சேரி அரசு மற்றும் மின்துறையிடம் இந்த வரைவு அறிக்கையை தந்துள்ளது.

இதுபற்றி மின்துறை உயர் அதிகாரிகளிடம் கேட்டதற்கு, "வரைவு அறிக்கைப்படி தற்போது மின்துறையில் ஊழியர்களுக்கு உண்டான அனைத்து சேவைகள், சலுகைகள் தொடரும். எத்தொகை திரட்டப்பட்டாலும் முதலில் ஊழியர்களின் நிதிக்கு ஒதுக்கப்பட்டு, மீதமுள்ள தொகை இதர தேவைகளுக்கு பயன்படுத்தப்படும். அரசிடம் சமர்ப்பிக்கப்பட்ட வரைவு அறிக்கை குறித்து முதல்வர், மின்துறை அமைச்சர்தான் தனியார்மயம் தொடர்பான நிலைப்பாட்டை எடுக்கவேண்டும்" என்று தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்