பள்ளி மாணவர்களுக்கு மன நல விழிப்புணர்வு, ஆலோசனை :

நாமக்கல்: நாமக்கல் மாவட்ட மன நலத் திட்டம் சார்பில் குருசாமிபாளையத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் மாணவர்களுக்கு மனநல விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி தலைமையாசிரியர் சி.ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். மனநல மருத்துவர் வெ.ஜெயந்தி பேசியதாவது:

போதைப் பொருட்கள் போல் செல்போன், சமூக வலைதளங்களும் ஒருவித போதை பழக்கம் தான். அளவோடு பயன்படுத்தினால் பிரச்சினைகள் இல்லை. ஒரு நாளைக்கு சராசரியாக இரண்டு மணி நேரத்திற்கு மேல் செல்போன் பயன்படுத்தக்கூடாது. செல்போன் பழக்கத்தினாலும் தூக்கம், வேலை, உணவு என அனைத்தும் பாதிக்கப்படுகிறது, என்றார். தொடர்ந்து மன அழுத்தத்தை குறைக்க மேற்கொள்ளும் சிகிச்சை முறைகள் குறித்து விளக்கிக் கூறப்பட்டது. மனநல ஆலோசகர் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE