நாமக்கல்லில் பயங்கர வெடிச் சத்தம் வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள் :

By செய்திப்பிரிவு

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் நேற்று காலை 11 மணியளவில் பயங்கர வெடிச்சத்தம் கேட்டதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினா்.

நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் நேற்று காலை 11 மணியளவில் பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. மின்மாற்றி வெடித்திருக்கலாம் அல்லது நில அதிர்வு ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகித்ததால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்தனர். எனினும், அதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லாததால் மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது.

இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நாமக்கல் மாவட்டத்தில் நில அதிர்வு எதுவும் இல்லை. ஜெட் ரக விமானங்கள் பறக்கும்போது இதுபோன்ற வெடிச்சத்தம் கேட்க வாய்ப்புள்ளது. எனவே, பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை, என தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்