ஈரோடு: ஈரோடு ரயில்வே காவல்துறை எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், நடப்பாண்டில் ரயில் மோதி மற்றும் ரயிலில் இருந்து தவறி விழுந்து 58 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுகுறித்து ஈரோடு ரயில்வே போலீஸார் கூறியதாவது:
ஈரோடு ரங்கம்பாளையம் மற்றும் மகுடஞ்சாவடி ஆகிய பகுதிகளில், 2 காதல் ஜோடியினர் மற்றும் ஒரு இளைஞர் என மொத்தம் 5 பேர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தண்டவாளத்தை கவனக்குறைவாக கடக்க முயன்றதால் ரயில் மோதி 39 ஆண்கள் மற்றும் 8 பெண்கள் என மொத்தம் 47 பேர் நடப்பாண்டில் இறந்துள்ளனர். ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்து 6 பேர் இறந்துள்ளனர்.
நடப்பாண்டில் ரயில் விபத்துகளில் இறந்த 58 பேரில், 2 பெண்கள் உள்ளிட்ட 10 பேரின் அடையாளம் மட்டும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. அவர்களைக் கண்டறிய தொடர்ந்து முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது என ஈரோடு ரயில்வே போலீஸார் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago