நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் பொதுமக்கள் மற்றும் வாகனப் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகள் மற்றும் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு, நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் நடவடிக்கை மேற்கொண்டார்.
நாகர்கோவில் நாகராஜா கோயில் ரத வீதி, ஒழுகினசேரி, நீதிமன்ற சாலை, ராமன்புதூர் சந்திப்பு, கணேசபுரம் சாலை, பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரி சாலை, டிஸ்லரி சாலை, செம்மாங்குடி சாலை போன்ற பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நேற்று முன்தினம் தொடங்கி நடந்து வருகிறது.
நேற்று 2-வது நாளாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. செம்மாங்குடி சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக நடைபாதைகளை மறைத்து கட்டப்பட்டிருந்த கட்டுமானம் மற்றும் மேற்கூரைகளை நகராட்சி ஊழியர்கள் பொக்லைன் மூலம் அகற்றினர். `நகர்ப்பகுதி முழுவதும் மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடர்ந்து நடைபெறும்’ என, மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago