கயத்தாறு காவல் நிலைய உதவி ஆய்வாளர் பாலு மற்றும் போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தெற்கு இலந்தைகுளம் பேருந்து நிறுத்தம் பகுதியில் சந்தேகப்படும்விதமாக நின்றவரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர் தடியம்பட்டியை சேர்ந்த செந்தூர் பாண்டி (50) என்பது தெரியவந்தது. அவர் வைத்திருந்த பையை சோதனையிட்ட போது, அதில் 27 மதுபாட்டில்கள் இருந்தது. அவரை போலீஸார் கைது செய்து, மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
இதேபோல் உதவி ஆய்வாளர் சுப்புராமகிருஷ்ணன் நாகலாபுரம் சாலையில் ரோந்து சென்றபோது, அங்குள்ள கோயில் அருகே நின்றவரை பிடித்து விசாரணை நடத்தினார். இதில், அவர் தடியம்பட்டியை சேர்ந்த தங்கமணி (39) என்பதும் விற்பனைக்காக 31 மதுபாட்டில்களை அவர் பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. தங்கமணி கைது செய்யப்பட்டார். மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இருவரிடமும் கயத்தாறு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago