கோவில்பட்டி வட்டார வேளாண்மை உழவர் நலத்துறையின் மூலம் விவசாய நிலங்களில் நீடித்த பசுமை போர்வை இயக்கம் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வேம்பு, புங்கன், செம்மரம் போன்ற மரக்கன்றுகள் ஏக்கருக்கு 50 எண்ணம் வரப்பில் நடுவதற்காக இலவசமாக வழங்கப்பட்டன. மேலும், 160 மரக்கன்றுகள் தனிப்பயிராக நடுவதற்கு வழங்கப்பட்டது. மரக்கன்றுகளை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் எஸ்.ஐ.முகைதீன் விவசாயிகளுக்கு வழங்கினார். நிகழ்ச்சியில், வேளாண்மை துணை இயக்குநர்கள் க.தமிழ்மலர் (மத்திய அரசு திட்டம்), முருகப்பன் (நுண்ணீர் பாசனம்), வேளாண்மை அலுவலர் ரீனா, துணை வேளாண்மை அலுவலர் தாணுமாலையன் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago