கன்னியாகுமரி மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு ரூ.100.43 கோடி மதிப்பிலான வங்கி கடன் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
நாகர்கோவில் ஸ்காட் கல்லூரி கலையரங்கில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், ஊரக பகுதியைச் சேர்ந்த 1,092 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.62.84 கோடி மதிப்பிலான வங்கி நேரடி கடனை மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் வழங்கினார்.
ஒரு ஊராட்சி அளவிலான கூட்டமைப்புக்கு ரூ.1.50 கோடி கடன் மற்றும் நகர்ப்புற பகுதியைச் சேர்ந்த 801 குழுக்களுக்கு 36.09 கோடி மதிப்பிலான கடன் வழங்கப்பட்டது. மகளிர் திட்ட இயக்குநர் மைக்கேல் அந்தோணி பெர்னாண்டோ, பாரத ஸ்டேட் வங்கி முதன்மை மேலாளர் ஹரிஹரன், முன்னோடி வங்கி மேலாளர்கள் அருண்நேரு, செந்தில், உதவி திட்ட அலுவலர்கள் பாக்கியவதி, அனிதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago