உண்டியலில் பணம் திருடிய 2 பேர் கைது :

By செய்திப்பிரிவு

திருவண்ணாமலை: தி.மலை மாவட்டம் வந்தவாசி அடுத்த குணக்கம் பூண்டி கிராமத்தில் உள்ள வேம்புலி அம்மன் கோயில் உண்டியல் பணம் கடந்த 3 நாட்களுக்கு முன்பு திருடு போனது. இது குறித்து தேசூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், வந்தவாசி – தேசூர் சாலையில் காவல்துறையினர் நேற்று முன்தினம் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, அவ் வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த 2 பேரை பிடித்து சோதனையிட்டனர். அப்போது அவர்களிடம் ரூ.2 ஆயிரம் மற்றும் இரும்பு ராடு இருந்தது. மேலும் அவர்கள் இருவரும், தேசூர் பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் மற்றும் சென்னை காட்டுப்பாக்கத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் என்பதும், வேம்புலி அம்மன் கோயிலில் உண்டியல் பணத்தை திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.2 ஆயிரம் மற்றும் இரும்பு ராடு பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர், இளம் சிறாரை சீர்திருத்தப்பள்ளியில் ஒப்படைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்