ஓய்வுபெற்ற அஞ்சல் ஊழியர் வீட்டில் திருட்டு :

By செய்திப்பிரிவு

குடியாத்தம்: வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த வடுகன்தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் காந்தி (64). ஓய்வு பெற்ற அஞ்சல் துறை ஊழியர். இவர், நேற்று முன்தினம் வேலூரில் உள்ள மகள் வீட்டுக்கு சென்றவர் நேற்று காலை மீண்டும் வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவை உடைத்து அதிலிருந்த ரூ.1 லட்சம் பணம், 3 பவுன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து, கே.வி.குப்பம் காவல் நிலையத்தில் காந்தி அளித்த புகாரின்பேரில் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்