திருவண்ணாமலை: கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காத மத்திய அரசை கண்டித்து தி.மலை மாவட்டம் போளூரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு வட்டாரத் தலைவர் சண்முகம் தலைமை வகித்தார். அப்போது அவர் பேசும் போது, “தமிழகத்தில் கடந்த 3 மாதங்களாக பெய்து வரும் கனமழைக்கு பல லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் மூழ்கி சேதமடைந்துள்ளன. இதனால், பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மத்திய அரசு நிவாரணம் வழங்காமல் இருப்பது கண்டிக்கத்தக்கது. வரலாறு காணாத கடும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் மற்றும் இழப்பீடு வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார். ஆர்ப்பாட்டத்தில், கோரிக்கையை வலியுறுத்தி முழக்கமிடப்பட்டது. இதில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago