தேவர்சோலையில் கருப்புக்கொடி ஏற்றி மக்கள் போராட்டம் :

By செய்திப்பிரிவு

கூடலூர் அடுத்துள்ள தேவர் சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட பாடந்தொரை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த சில மாதங்களாக இரண்டு காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. வீடுகளை தாக்கியும், தானியங்கள் உள்ளிட்ட உணவுப் பொருட்களை சாப்பிட்டும், மிதித்தும் யானைகள் சேதப்படுத்துவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

சில நேரங்களில் வீடுகளுக்கு அருகே யானைகள் நிற்பதால், வெளியே வரமுடியாமல் வீடுகளுக்குள்ளேயே தஞ்சம்புகும் நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும், யானைகளை நிரந்தரமாக வனப்பகுதிக்குள் விரட்ட எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே தமிழக அரசு மற்றும் வனத்துறையினரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வீடுகளிலும், சாலையிலும் கருப்புக்கொடி ஏற்றி, பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு பிறகும் யானைகளை நிரந்தரமாக வனப்பகுதிக்குள் விரட்டவில்லையெனில், தொடர் போராட்டத்தை முன்னெடுக்கப் போவதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்