முதுமலையில் யானை உயிரிழப்பு :

By செய்திப்பிரிவு

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட சீகூர் சரக வனப் பகுதிகளில் வனத்துறையினர் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மூக்குத்திபாலம் பகுதியில் பெண் யானை உயிரிழந்து கிடப்பதைக் கண்ட வன ஊழியர்கள், உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர்.

தகவலின் பேரில் முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் அருண்குமார் தலைமையிலான அலுவலர்கள் சம்பவ இடத்துக்கு சென்று, யானையின் சடலத்தை பார்வையிட்டனர்.

யானையின் சடலம் இன்று பிரேத பரிசோதனை செய்யப்படும். உடல் முழுவதும் அழுகிய நிலையில் உள்ளது. எனவே பிரேதபரிசோதனை முடிவுகள் வெளியான பிறகே யானை உயிரிழந்ததற்கான காரணம் தெரியவரும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்