மேல்மருவத்தூரில் சக்திமாலை இருமுடி விழா : லட்சுமி பங்காரு அடிகளார் தொடங்கி வைத்தார்

By செய்திப்பிரிவு

மேல்மருவத்தூரில் சக்திமாலை இருமுடி விழா வரும்ஜனவரி 17-ம் தேதி வரை நடைபெறுகிறது. ஜனவரி 18-ம் தேதி தைப்பூச விழாநடைபெற உள்ளது. ஆண்டுதோறும் பக்தர்கள் தைப்பூச ஜோதி விழாவுக்கு முன்பாக சக்திமாலை அணிந்து சக்தி விரதம் இருந்து அம்மனுக்கு இருமுடி எடுத்து வந்து சுயம்பு அன்னைக்கு அபிஷேகம் செய்வது வழக்கம்.

வரும் ஜனவரி 18-ம் தேதி பங்காரு அடிகளார் தைப்பூச ஜோதியை ஏற்றிவைக்கிறார்.

இதையொட்டி இருமுடி அணியும் விழா நேற்று அதிகாலை 3 மணிக்கு மங்கள இசையுடன் தொடங்கியது. காலை 6 மணிக்கு கருவறை மண்டபத்தில் இயற்கை வழிபாடு நடைபெற்றது.

பின்னர் காலை 6.15மணிக்கு இருமுடி அபிஷேகத்தை லட்சுமி பங்காரு அடிகளார் தொடங்கி வைத்தார். முதலில் 9 சிறுமியர்களும், 9 தம்பதியர்களும் அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து பக்தர்கள் அபிஷேகம் செய்தனர்.

இருமுடி விழா முடியும்வரை தொடர்ந்து அன்னதானம் நடைபெற உள்ளது. இந்த இருமுடிவு விழாவுக்காகபல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் மேல்மருவத்தூர் வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக தெற்கு ரயில்வே பல சிறப்பு ரயில்களை இயக்க உள்ளது. வழக்கமாக செல்லும் பலவிரைவு ரயில்களும் மேல்மருவத்தூரில் நின்று செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

விழா ஏற்பாடுகளை ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத்தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் தலைமையில் துணைத்தலைவர்கள் கோ.ப.செந்தில்குமார், தேவி ரமேஷ் ஆகியோர் தலைமையிலான குழுவினர் செய்கின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்