திமுகவை பற்றி பேசினால் வழக்குப்பதிவு - சமூக நீதி என்ற பெயரில் சர்வாதிகார அரசு நடக்கிறது : பாஜக காயத்ரி ரகுராம் ஆதங்கம்

உத்தரப் பிரதேச மாநிலத்தில் காசி விஸ்வநார் கோயிலில் பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சியை நேரடி ஒளிபரப்பு செய்யும் நிகழ்ச்சி சிதம்பரத்தில் நேற்று நடந்தது. இதை பாஜகவினர் கண்டு ரசித்தனர்.

இந்நிகழ்ச்சியில் பாஜகவின் கலை, இலக்கியப் பிரிவு செயலாளரும், பிரபல திரைப்பட நடிகையுமான நடிகை காயத்ரி ரகுராம் பங்கேற்று கட்சி நிர்வாகிகளுடன் அமர்ந்து நிகழ்ச்சிகளை பார்த்தார்.

பின்னர் செய்தியாளரிடம் பேசிய காயத்ரி ரகுராம், “தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள், திரையரங்குகள் திறக் கப்பட்டுள்ளன. ஆனால் கோயில் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு தடைவிதிக்கப்படுகிறது. குறிப்பாகஇந்துக்களுக்கு இதுபோன்றகட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோயில் தேரோட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டது ஏன் என்பது புரியவில்லை.

மாரிதாஸ் என்ன தவறு செய்தார்? கேள்வி கேட்டதற்காக அவர் மீது வழக்கு பாய்கிறது. கேள்வி கேட்டால் அதற்கு பதில் சொல்லுங்கள்.

திமுகவை பற்றி பேசினாலே வழக்குப்பதிவு செய்யப்படுகிறது. இதுதான் சமூக நீதியா? திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது என்னவெல்லாம் பேசினார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். இப்போது சர்வாதிகார அரசுதான் நடந்து கொண்டிருக்கிறது என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்