கொலை முயற்சி - விவசாயிக்கு 5 ஆண்டுகள் சிறை :

By செய்திப்பிரிவு

போடி அருகே உள்ள தேவாரம் கருப்பசாமி கோயில் தெருவைச் சேர்ந்தவர்கள் கண்ணன்(42), நாகராஜ்(46). விவசாயிகள். இவர்களுக்கு வரப்பு பிரச்சினை இருந்தது. இது அதிகரித்த நிலையில் 2013-ல் நாகராஜை கண்ணன் கத்தியால் குத்த முயன்றார். அப்போது தடுக்க முயன்ற தங்கப்பாண்டி என்பவருக்கு காயம் ஏற்பட்டது.

தேவாரம் காவல் ஆய்வாளர் வினோஜி வழக்குப் பதிவு செய்து கண்ணனைக் கைது செய்தார்.

இந்த வழக்கு விசாரணை தேனி மாவட்ட சார்பு நீதி மன்றத்தில் நடைபெற்றது. விசாரணை முடிந்த நிலையில் கண்ணனுக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை, ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி ஏ.சுந்தரி தீர்ப்பளித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்