ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள படிக்காசு வைத்தான்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு, கைவினைப் பொருள் தயாரிக்கும் போட்டிகள் நடைபெற்றன.
இதில், 4-ம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் பாடத்தில் காவல்காரர் என்ற பாடத்தில் வரும் சோளக்கொல்லை பொம்மை உருவாக்கும் போட்டியும், 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு கைவினைப் பொருள் தயாரிக்கும் போட்டியில் தானியங்கள், காய்கறிகள் கொண்டு பாசி உருவாக்கும் போட்டியும் நடைபெற்றன.
இப்போட்டியில், 4ம் வகுப்பில் ஜோதிமணி, பொன் சக்தி, கெளசல்யா, லூரி, பவித்ரா, தஸ்மினரா பேகம் ஆகியோர் வெற்றிபெற்றனர். 5ம் வகுப்பில் ஆதிகணேஷ், ஸ்ரீஹரி, சுரேஷ்குமார், யோகமுனிஸ்வரன் ஆகியோர் வெற்றிபெற்றனர்.
இவர்களுக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் ஜெயக்குமார் ஞானராஜ் பரிசுகள் வழங்கி பாராட்டுத் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago