சாத்தூர் மேலகாந்தி நகரைச் சேர்ந்தவர் சுப்பிரமணி(32). இவர் சாத்தூர் நகராட்சியில் துப்புரவுப் பணியாளராகப் பணிபுரிந்து வந்தார். அக்டோபர் 9-ம் தேதி கழிவுநீர் வாய்க்காலில் விழுந்து இறந்தார். இந்நிலையில், கழிவு நீர் வாய்க்காலை சுத்தம் செய்தபோது விஷ வாயு தாக்கி இறந்ததாகவும், குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு தரக்கோரியும் விருதுநகர் ஆட்சியர் அலுவலகம் முன் அவரது தாய் தங்கம்மாள் மற்றும் உறவினர்கள், வனவேங்கை கட்சியினர் தர்ணா செய்தனர்.
இவர்களுடன் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர். அதன்பிறகு ஆட்சி யரிடம் மனு கொடுத்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago