ஊடேதுர்கம் காப்புக்காட்டில் 30 யானைகள் தொடர்ந்து முகாம் :

ஓசூர் ஊடேதுர்கம் காப்புக்காட்டில் 30-க்கும் மேற்பட்ட யானைகள் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து முகாமிட்டு வருவதால் கிராம மக்களுக்கு எச்சரிக்கை செய்யும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

ஓசூர் வனச்சரகம், ராயக் கோட்டை வனச்சரகம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் கேழ்வரகு அறுவடைப்பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ராயக்கோட்டை வனச்சரகத்தில் உள்ள ஊடே துர்கம் காப்பக்காட்டில் 30-க்கும் மேற்பட்ட யானைகள் 3 நாட்களாக தொடர்ந்து முகாமிட்டுள்ளன. யானைக் கூட்டத்தை ஜவளகிரி காப்புக்காட்டுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வனத்துறைக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

யானைகளை கண்காணிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஊடேதுர்கம் காப்புக்காட்டில் தொடர்ந்து 30 யானைகள் முகாமிட்டிருப்பது குறித்து வனச்சரகத்தை ஒட்டியுள்ள 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் எச்சரிக்கை செய்யும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். வனத்தை ஒட்டி வசிக்கும் மக்கள், இரவு நேரத்தில் வனப்பகுதிக்குச் செல்வதை தவிர்க்க வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE