தருமபுரி மாவட்டம் அரூரில் 16, 17-ம் தேதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்ட மாநாடு நடக்க உள்ளது.
இது தொடர்பாக, நேற்று தருமபுரி செங்கொடிபுரத்தில் உள்ள கட்சியின் அலுவலகத்தில் கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்க வந்த, கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் குணசேகரன் செய்தியாளர்களிடம் கூறியது:
தருமபுரி மாவட்டம் அரூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23-வது மாவட்ட மாநாடு, வரும் 16, 17 ஆகிய தேதிகளில் நடக்க உள்ளது. 3 வேளாண் சட்டங்கள் மத்திய அரசால் திரும்பப் பெறப்பட்டுள்ள நிலையில் விவசாயிகளின் ஏனைய கோரிக்கைகள் குறித்து இம்மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளன. அதேபோல, தருமபுரி மாவட்டத்துக்கு அறிவிக்கப்பட்ட சிப்காட் திட்டம், மாவட்டத்தில் வேலையின்மையை தடுக்க சிறப்புத் திட்டங்கள் செயலாக்கம், காவிரி, தென்பெண்ணை ஆற்றின் உபரி நீரை பாசன தேவைக்கு பயன்படுத்தும் திட்டம் ஆகியவை குறித்தும் இம்மாநாட்டில் வலி யுறுத்தப்பட உள்ளன. இந்த 2நாள் மாநாட்டில் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பங்கேற்க உள்ளார்.இவ்வாறு கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago