வியர்க்குதே :

By செய்திப்பிரிவு

கன்னியாகுமரி, தெங்கம்புதூர் துணைமின் நிலையங்களில் நாளை (15-ம் தேதி) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.

இவ்வேளையில், தெங்கம்புதூர், பறக்கை, மேலமணக்குடி, முகிலன்விளை, மணிக்கட்டி பொட்டல், ஒசரவிளை, காட்டுவிளை, ஈத்தாமொழி, புதூர், தர்மபுரம், பழவிளை, வெள்ளாளன்விளை, பொட்டல், மேலகிருஷ்ணன்புதூர், பள்ளம், புத்தளம், பிள்ளையார்புரம், புத்தன்துறை, ராஜாக்கமங்கலம், கன்னியாகுமரி, கோவளம், ராஜாவூர், மைலாடி, வழுக்கம்பாறை, அழகப்பபுரம், கீழமணக்குடி, கொட்டாரம், சுசீந்திரம், அஞ்சுகிராமம், சாமித்தோப்பு, வாரியூர், கோழிக்கோட்டுப்பொத்தை ஆகிய இடங்களில் மின்சாரம் இருக்காது.

வரும் 17-ம் தேதி மீனாட்சிபுரம் துணை மின் நிலையத்துக்குட்பட்ட வடிவீஸ்வரம், கோட்டாறு, மீனாட்சிபுரம், கணேசபுரம், இடலாக்குடி, ஒழுகினசேரி, தளியபுரம், ராஜபாதை, செட்டிகுளம் சந்திப்பு, கரியமாணிக்கபுரம், சற்குணவீதி, ராமன்புதூர், வெள்ளாளர் காலனி, சவேரியார் கோயில் சந்திப்பு, கே.பி.ரோடு, ராமவர்மபுரம, எஸ்.எல்.பி. தெற்கு பகுதி ஆகிய இடங்களிலும் மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்