மின்வாரிய அலுவலகத்தை வாலிபர் சங்கத்தினர் முற்றுகை :

By செய்திப்பிரிவு

கோவில்பட்டியில் உள்ள சேதமடைந்த மின் கம்பங்களை மாற்ற வலியுறுத்தி மின்வாரிய அலுவலகத்தை வாலிபர் சங்கத்தினர் முற்றுகையிட்டனர்.

கோவில்பட்டி நகரப்பகுதி மற்றும் ஊரகப்பகுதியில் உள்ளமின்கம்பங்களில் பெரும்பாலானவற்றில் கான்கிரீட் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரியும் வண்ணம்மோசமான நிலையில் காணப்படுகின்றன. இதே போல், இனாம் மணியாச்சி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளிலும் மின்கம்பங்கள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன. சில இடங்களில் சாலையின் நடுவே மின் கம்பம் உள்ளதால் மோட்டார் சைக்கிள் கூட செல்ல முடியாத நிலை உள்ளது.

இதனை கண்டித்தும், மோசமான நிலையில் உள்ள மின்கம்பங்களை மாற்ற வலியுறுத்தியும் நேற்று இந்திய ஜனநாயக வாலிபர்சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் கோவில்பட்டி மின்வாரியஅலுவலகத்தை முற்றுகையிட்டனர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவர் மா.மணிகண்டன் தலைமை வகித்தார். இதில் பெண்கள் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்