தூத்துக்குடியில் சுனாமி குடியிருப்பு பட்டாக்களை கிராம கணக்கில் சேர்க்காததால், தங்களுக்கு எந்தவித அடிப்படை வசதிகளும் கிடைக்கவில்லை எனக் கூறி, அந்த குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
தூத்துக்குடி அருகேயுள்ள மாப்பிளையூரணி ஊராட்சிக்கு உட்பட்ட சுனாமி குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு திரண்டு வந்து,மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் அதிகாரிகளிடம் அளித்த மனு:
கடந்த 2004-ம் ஆண்டு சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாப்பிளையூரணி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அரசு நிலத்தில் தொண்டு நிறுவனம்மூலம் 202 வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டன. இந்தவீடுகள் கடந்த 2008-ம் ஆண்டு பயனாளிகளிடம்ஒப்படைக்கப்பட்டன. தொடர்ந்து கடந்த 2010-ம்ஆண்டு அந்த குடியிருப்புகளுக்கு பட்டா வழங்கப்பட்டது. ஆனால் தற்போது வரை அந்த பட்டாக்கள் இன்னும் கிராம கணக்கில் சேர்க்கப்படவில்லை.
இதனால் வட்டாட்சியர் அலுவலக கணக்கிலும்,கிராம நிர்வாக அலுவலர் கணக்கிலும் எங்கள் இடங்களுக்கான எந்தவித கோப்புகளும் இல்லை.எங்கள் பகுதியில் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. இது தொடர்பாக மாப்பிளையூரணி ஊராட்சியில் கேட்டால், சுனாமி குடியிருப்பு பகுதி கணக்குகள் எதுவும் இதுவரை ஊராட்சியிடம் ஒப்படைக்கப்படவில்லை என கூறுகின்றனர். எனவே, மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்து சுனாமி குடியிருப்பு கணக்குகளை ஊராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைத்துஎங்களுக்கு சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடைக்க ஆவன செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி குறிஞ்சி நகரில் உள்ள தூத்துக்குடி மக்களவை தொகுதி உறுப்பினர் கனிமொழி வீட்டுக்கும் அவர்கள் சென்று மனு அளித்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் சேர்மன் கோயில்தெருவில் வசிக்கும் மக்கள் அளித்த மனு:நாங்கள் இப்பகுதியில் மூன்று தலைமுறைகளாக வசித்து வருகிறோம். ஆனால், தற்போதுதாமிரபரணி நதிக்கரையில் நீர்நிலை புறம்போக்கில் வசித்து வருவதாக கூறி, எங்கள் வீடுகளை அகற்றச்சொல்கின்றனர். தாமிரபரணி நதிக்கரையில்இருந்து 120 மீட்டர் தொலைவில் தான் நாங்கள்வசித்து வருகிறோம். இதுவரை வெள்ளத்தால்நாங்கள் பாதிக்கப்பட்டதில்லை. இதேபகுதியில் சில குடியிருப்புகளுக்கு அரசு சார்பில் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. எனவே, எங்களுக்கும் பட்டா வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
தெற்கு வீரபாண்டியபுரம் கிராம மக்கள் அளித்தமனு: தூத்துக்குடி சிப்காட் விரிவாக்கத்துக்குஎங்கள் பகுதியில் 1,616 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதில் 2008-ம் ஆண்டில் எங்கள்ஊரில் எடுக்கப்பட்ட 316 ஏக்கர் நிலங்களுக்குஏக்கருக்கு ரூ.80 ஆயிரம் மட்டுமே இழப்பீடுவழங்கப்பட்டது. 2010-ல் எடுக்கப்பட்ட 1,300 ஏக்கர்நிலங்களுக்கு ஏக்கருக்கு ரூ.6 லட்சம் இழப்பீடு நிர்ணயிக்கப்பட்டது. எனவே, எங்களுக்கும் ரூ.6 லட்சம் இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago