பொதுவழி பிரச்சினையில் பெண் காவலர் மிரட்டுவதாக குற்றஞ்சாட்டி மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கண்முன் தீக்குளிக்க முயன்ற இளைஞரால் சலசலப்பு ஏற்பட்டது.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்வுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், 379 பொது நல மனுக்களை அரசு அதிகாரிகளிடம் பொதுமக்கள் வழங்கினர்.
இதில், திருப்பத்தூர் அடுத்த குமாரம்பட்டி வள்ளுவர் மேடு பகுதியைச் சேர்ந்த தயாளன் மகன் மேகநாதன் (34) என்பவர், ஆட்சியர் அமர் குஷ்வாஹாவிடம் மனு ஒன்றை அளித்தார்.
ஆட்சியர் மனுவை பெற்று படித்துக்கொண்டிருந்தபோது மேகநாதன் தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய்யை தன் உடல் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
உடனே, காவலர்கள் மேகநாதன் கையில் இருந்த மண்ணெண்ணெய் கேனை பறித்து, அவர் மீது தண்ணீரை ஊற்றினர். பிறகு, அவரிடம் ஆட்சியர் விசாரித்த போது, அவர் கூறியதாவது, ‘‘எங்கள் நிலத்தின் அருகே சுரேஷ் (48) என்பவருக்கு சொந்தமாக ஓர் ஏக்கர் நிலம் இருந்தது. இந்த நிலத்தை கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுரேஷ் விற்றுவிட்டார்.
அப்போது நாங்கள் கடந்த பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த பொதுவழியை அவர் விற்றுவிட்டதாக கூறி அவ் வழியாக எங்கள் குடும்பத்தார் செல்லக் கூடாது என சுரேஷூம், அவரது மனைவியான ஓசூர் மகளிர் காவல் நிலையத்தில் பெண் காவலராக பணியாற்றி வரும் பூங்கோதை(42) என்பவர் எங்களை மிரட்டி வருகின்றனர்.
எனவே, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago