வேலூர்: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள முருகன் வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரது அறையில் கடந்த 2019-ம் ஆண்டு நடத்தப்பட்ட திடீர் சோதனையில் செல்போன் சார்ஜர், சிம்கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. அப்போது, சோதனை செய்த காவலர்களை முருகன் அவதூறாக பேசியதாக புகார் கூறப்படுகிறது.
இது தொடர்பாக முருகன் மீது பாகாயம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கின் விசாரணை வேலூர் முதலாவது மாஜிஸ்திரேட் முகிலாம்பிகை முன்னிலையில் நடைபெற்று வருகிறது. வழக்கின் விசாரணைக்காக முருகனை நேற்று பிற்பகல் நீதிமன்றத்தில் காவல் துறையினர் ஆஜர்படுத்தினர். அப்போது, வழக்கை வரும் 27-ம் தேதிக்கு மாஜிஸ்திரேட் தள்ளி வைத்ததால் மீண்டும் பலத்த பாதுகாப்புடன் ஆண்கள் மத்திய சிறையில் முருகன் அடைக்கப்பட்டார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago