கொலை வழக்கில் தேடப்பட்ட தம்பதி கைது :

By செய்திப்பிரிவு

வாணியம்பாடி:திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வன்னிய அடிகளார் நகரைச் சேர்ந்தவர் லாரி உரிமையாளர் வெங்கடேசன் (34). இவரிடம், சின்னவேப்பம்பட்டு பகுதியைச் சேர்ந்த மெக்கானிக் சங்கர் (37) என்பவர் ரூ.10 லட்சம் கடன் பெற்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு கொடுத்த கடன் தொகையை கேட்டு வாங்க சங்கர் வீட்டுக்கு வெங்கடேசன் சென்றார்.

அப்போது, அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்தசங்கர் வீட்டில் இருந்த இரும்பு கம்பியால் வெங்கடேசனை தாக்கினார். இதில், வெங்கடேசன் மயங்கி விழுந்தார். இதைக்கண்டதும், சங்கர் தனது மனைவி பாக்கியலட்சுமியுடன் தலைமறைவானார். காயமடைந்த வெங்கடேசன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இதுகுறித்து வாணியம்பாடி கிராமிய காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே, தலைமறைவான தம்பதியை கைது செய்ய 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்நிலையில், பெங்களூருவுக்கு தப்பிச்செல்ல ஓசூர் பேருந்து நிலையத்தில் தம்பதியினர் காத்திருப்பதாக தனிப்படை காவல் துறையினருக்கு நள்ளிரவு தகவல் வந்தது. அதன்பேரில், ஓசூர் பேருந்து நிலையம் சென்ற தனிப்படை காவல்துறையினர் அங்கு காத்திருந்த தம்பதியை கைது செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்