குடியாத்தம் அருகே லேசான நில அதிர்வு :

By செய்திப்பிரிவு

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த மீனூர்மலை, டி.டி.மோட்டூர் உள்ளிட்ட சில கிராமங்களில் கடந்த சில நாட்களாக நில அதிர்வு உணரப்பட்டது. இதில், டி.டி.மோட்டூர் கிராமத்தில் நேற்று முன்தினம் இரவும் லேசான நில அதிர்வை பொதுமக்கள் உணர்ந்துள்ளனர்.

இதனால், அச்சமடைந்த பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியேறியதுடன் இரவு முழுவதும்வெளியில் உறங்கியுள்ளனர். இந்த தகவலறிந்து வருவாய்த்துறையி னர் நேற்று காலை ஆய்வு மேற்கொண்டனர். அதில், யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பதை உறுதி செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்