காஞ்சிபுரம் கடந்த 2011-ம் ஆண்டு பெருநகராட்சியாக அறிவிக்கப்பட்டது. எனினும், பேருந்து போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு வசதிகள் மேம்படுத்தப்படாமல் உள்ளன. இந்நிலையில், காஞ்சிபுரம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
இதனால், நகரின் பேருந்து சேவையை மேம்படுத்தும் வகையில் சென்னை மாநகரப் பேருந்துசேவையை காஞ்சிபுரம் வரை நீட்டிக்க வேண்டியது அவசியமாகிறது. தற்போது, சுங்குவார் சத்திரம், வாலாஜாபாத் பகுதி வரை மட்டுமே மாநகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
எனவே, சென்னை மாநகர போக்குவரத்துக்கழக எல்லையாக வரையறுக்கப்பட்டுள்ள 50 கிமீ தொலைவை, 75 கிமீ ஆக நீட்டித்து, காஞ்சிபுரம் நகரம் வரை மாநகரப் பேருந்துகளை இயக்க வேண்டும் என உள்ளூர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், தமிழ்நாடு மக்கள் உரிமை பாதுகாப்பு மற்றும் ஊழல்ஒழிப்பு சங்கம் சார்பில் தமிழக முதல்வர், போக்குவரத்துத் துறைஅமைச்சர் ஆகியோருக்கு கோரிக்கை மனுக்கள் அனுப்பப்பட்டுள்ளன. இதில, "தியாகராய நகர்,சென்ட்ரல், தலைமைச் செயலகம், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை, அண்ணா பல்கலை. உள்ளிட்ட பகுதிகளுக்கு காஞ்சிபுரத்தில் இருந்து நேரடி மாநகர பேருந்துசேவையை தொடங்க வேண்டும்என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது" என்று சங்கத்தின் மாவட்ட செயலாளர் பெர்ரி கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago