காளையார்கோவிலில் ஆஞ்சநேயர் கோயில் இடிக்கப்பட்டதை கண்டித்து மறியல் செய்த பாஜக வினருக்கும், போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர் கோயில் தெப்பக்குளத்தின் மேற்குக் கரையில் சிலர் ஆஞ்சநேயர் கோயில் கட்டி வந்தனர். டிச.10-ல் கோயில் கட்டும் இடம் நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமானது எனக் கூறி வருவாய், நெடுஞ்சாலைத் துறையினர் கோயிலை அகற்றி னர். இதைக் கண்டித்து பாஜக வினர் 3-வது நாளாக போராட்டம் செய்தனர்.
இதற்கிடையே கோயில் கட்டுவதற்காக வைத்திருந்த கம்பிகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றுவிட்டனர். கோயில் இடிக்கப்பட்டதைக் கண்டித்தும், கம்பிகளைத் திருடியவர்களை கைது செய்யக் கோரியும் நேற்று மாலை காளையார்கோவில் பேருந்து நிலையம் முன் பாஜக மாவட்டத் தலைவர் சக்தி தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திடீரென 300-க்கும் மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் மதுரை-தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மறியலில் ஈடுபட்டவர்களை போலீஸார் அப்புறப்படுத்த முயன்றபோது இரு தரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago