பொட்டாஷ் உரத்தின் விலையை குறைக்க விவசாயிகள் வலியுறுத்தல் :

தற்போது 60 சதவீதம் வரை உயர்ந்துள்ள பொட்டாஷ் உரத்தின் விலையை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

இதுதொடர்பாக, அச்சங்கத்தின் தஞ்சாவூர் மாவட்டத் தலைவர் பி.செந்தில்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

டெல்டா மாவட்டங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா, தாளடி நெற்பயிர்களின் வளர்ச்சி கடந்த மாதம் பெய்த மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. அந்தப் பயிர்களை காப்பாற்ற அவசியம் பொட்டாஷ் உரம் இடவேண்டிய நிலையில் விவசாயிகள் உள்ளனர். ஆனால், தற்போது சந்தையில் பொட்டாஷ் உரத்தின் விலை 60 சதவீதம் உயர்ந்து, அதாவது 50 கிலோ கொண்ட மூட்டையின் விலை ரூ.1,040-ல் இருந்து ரூ.1,700 ஆக அதிகரித்துள்ளது.

ஏற்கெனவே உரத்துக்கான மானியமாக மத்திய அரசு ரூ.303 மட்டுமே வழங்கும் சூழலில், இந்த விலை உயர்வால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படும் நிலையில் உள்ளனர். எனவே, மத்திய அரசு உரத்துக்கான மானியத்தை அதிகப்படுத்தி வழங்குவதுடன், பொட்டாஷ் உரத்தின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்