தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் 5 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் உச்சி மாகாளியம்மன் கோயில் தெருவை சேர்ந்த அப்துல் ரசாக் மகன் சதாம் உசேன் என்ற சிலிண்டர் (30) என்பவரை கஞ்சா விற்ற வழக்கில் ஆறுமுகநேரில் போலீஸார் கடந்த 22.11.2021 அன்று கைது செய்தனர். தூத்துக்குடி செல்சினி காலனியை சேர்ந்த மூக்காண்டி மகன் மாரிமுத்து (26), வள்ளிநாயகபுரத்தை சேர்ந்த ஆதிலிங்கம் மகன் கார்த்திக் ராஜா (21) ஆகிய இருவரையும் கொலை வழக்கில் தூத்துக்குடி தென்பாகம் போலீஸார் கடந்த 23.11.2021-ல் கைது செய்தனர்.
திருநெல்வேலி மாவட்டம் ராமையன்பட்டியை சேர்ந்த இசக்கிராஜா (31), தாழையூத்தை சேர்ந்த பரமசிவன் மகன் பிரபாகரன் (35) ஆகிய இருவரையும் புகையிலை பொருட்களை விற்பனை செய்தாக திருச்செந்தூர் போலீஸார் கடந்த 26.11.2021 அன்று கைது செய்தனர்.
இவர்கள் 5 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக் குமார் அளித்த பரிந்துரையை ஏற்று மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் உத்தரவிட்டார். அதன்பேரில் சதாம் உசேன் உட்பட 5 பேரும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதன் மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டில் இதுவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 182 ஆக அதிகரித்துள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago