மத்திய அரசின் சார்பில் ஆண்டு தோறும் படைப்பாற்றல் மிக்க அறிவியல் செயல்பாட்டுக்கான இளம் விஞ்ஞானிகளை தேர்வு செய்யும் மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் காமராஜ் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் 2021-ம் ஆண்டுக்கான 29-வது மாவட்ட அளவிலான தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு தூத்துக்குடி காமராஜர் கல்லூரியில் வைத்து நேற்று நடைபெற்றது.
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட தலைவர் சம்பத் சாமுவேல் தலைமை வகித்தார். காமராஜ் கல்லூரி முதல்வர் து.நாகராஜன் முன்னிலை வகித்தார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் க.பாலதண்டாயுதபாணி மாநாட்டை தொடங்கி வைத்தார். நாகலாபுரம் அரசு கல்லூரி முதல்வர் இரா.சாந்தகுமாரி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.
மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர் செ.சுரேஷ்பாண்டி வரவேற்றார். மாநாட்டில் மாவட்டம் முழுவதும் 57 பள்ளிகளில் இருந்து மாணவர்கள் 110 அறிவியல் படைப்புகளை காட்சிப் படுத்தியிருந்தனர். இந்த படைப்புகளை நடுவர் குழுவினர் ஆய்வு செய்து 12 படைப்புகளை மாநில மாநாட்டுக்கு தேர்வு செய்தனர். மாநாட்டின் கல்வி ஒருங்கிணைப் பாளர் என்.சகர்பான் ஆய்வு முடிவுகளை வெளியிட்டார். தொடர்ந்து சிறந்த படைப்புகளுக்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில செயலாளர் சுரேஷ்குமார் உள்ளிட்டோர் பரிசு வழங்கினர். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தை சேர்ந்த சுமதி நன்றி கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago