ராணிப்பேட்டை மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் தொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் சொந்தமாக தொழில் தொடங்க அதிகபட்ச திட்ட முதலீடு வியாபாரம் மற்றும் சேவை சார்ந்த தொழில்களுக்கு ரூ.5 லட்சம் வரையிலும், உற்பத்தி தொழில் களுக்கு ரூ.15 லட்சம் வரையில் வங்கி கடன் வழங்கப்படுகிறது.
மானிய திட்டம் முதலீட்டில் 25 % அதிகபட்சமாக ரூ.2.50 லட்சம் வரை பெறலாம். இதற் கான விண்ணப்பங்களை www.msmeonline.tn.gov.in/uyegp என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். PMEGP திட்டத்தில் அதிகபட்ச திட்ட முதலீடு சேவை சார்ந்த தொழில்களுக்கு ரூ.10 லட்சம் வரை உற்பத்தி சார்ந்த தொழில்களுக்கு ரூ.25 லட்சம் வரை வங்கி கடன் வழங்கப்படுகிறது. திட்ட முதலீட்டில் அதிகபட்ச மானியத்தொகை 35% அதாவது ரூ.8.75 லட்சம் வழங்கப்படுகிறது. இதற்கு வயது வரம்பு இல்லை, படிக்காத இளைஞர்கள் சேவை தொழிலுக்கு 5 லட்சம் மற்றும் உற்பத்தி தொழிற்கடனுக்கு 10 லட்சம் வரை பெறலாம். 5 முதல் 10 லட்சத்துக்கு மேல் தேவைப்படும் விண்ணப்பதாரர்கள் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
NEEDS திட்டத்தில் குறைந்தபட்ச முதலீடு ரூ.10 லட்சம் மேல் அதிகபட்ச திட்ட முதலீடு சேவை மற்றும் உற்பத்தி சார்ந்த தொழில்களுக்கு அதிகபட்சமாக ரூ.5 கோடி வரை வங்கிக்கடன் வழங்கப்படும்.
திட்ட முதலீட்டில் 25% அதிக பட்சம் ரூ.75 லட்சம் மானியமாக வழங்கப்படுகிறது. எஸ்சி/எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளாக இருந்தால் கூடுதலாக 10% மானியம் பெறலாம். இதற்கான விண்ணப்பங்கள் www.msmeonline.tn.gov.in/needs என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். இதற்கான கல்வித்தகுதி 12-ம் வகுப்பு தேர்ச்சி. பொதுப்பிரிவுக் கான வயது வரம்பு 21 முதல் 35 வயது வரை இருக்க வேண்டும். சிறப்பு பிரிவான மகளிர், ஆதி திராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப் பட்டோர், முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகபட்ச வயது வரம்பு 45 ஆகும். இத்திட்டத்துக்கு ஆண்டு வருமானம் உச்ச வரம்பு கிடையாது.விண்ணப்பதாரர்கள் 3 ஆண்டுகளுக்கு தமிழகத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
இதுகுறித்து மேலும் விவரங்களுக்கு எண்:5, தேவராஜ் நகர், ராணிப்பேட்டை மாவட்டம் என்ற முகவரியில் செயல்பட்டு வரும் மாவட்ட தொழில் மையம், பொது மேலாளர் அலுவல கத்தில் நேரிலோ அல்லது தொலைபேசி 04172-270111 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்துக் கொள்ளலாம்’’ என தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago