மானாமதுரையில் பெட்ரோல் பங்க்கில் தண்ணீர் கலந்த பெட் ரோல் விற்றதாக புகார் எழுந்தது. இதையடுத்து, அந்த பங்க்குக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை சிப்காட் காவல் நிலையம் அருகே உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கில் நேற்று முன்தினம் இரவு பெட்ரோல் நிரப்பிய 20-க்கும் மேற்பட்டோரின் மோட்டார் சைக்கிள்கள் பழு தடைந்தன. இதையடுத்து தண்ணீர் கலந்த பெட்ரோல் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறி, வாகன ஓட்டுநர்கள் சம்பந்தப் பட்ட பெட்ரோல் பங்க்கை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அவர்களை போலீஸார் சமரசப்படுத்தி அனுப்பிவைத்தனர். சிலர் பழுதடைந்த வாகனங்களை அங்கேயே விட்டுச் சென்றனர்.
இந்நிலையில் நேற்று தொழிலாளர் நலத் துறை துணை ஆய்வாளர் கதிரவன், இந்துஸ் தான் பெட்ரோலிய நிறுவன மண் டல மேலாளர் ஹரிஷ்ராம் ஆகி யோர் பெட்ரோல் பங்க்கை ஆய்வு செய்தனர். அதன் பின் பெட்ரோல் பங்க்குக்கு சீல் வைத்தனர்.
அதோடு, மெக்கானிக்குகளை வரவழைத்து பழுதடைந்த இரு சக்கர வாகனங்களை பழுது நீக்கி உரிமையாளர்களிடம் ஒப்படைக் கப்பட்டன. அவர்கள் வாங்கிய பெட்ரோலுக்கான தொகையும் திருப்பி அளிக்கப்பட்டது.
அந்த பங்க்கில் இருந்த பெட்ரோலை ஆய்வுக்காக எண்ணெய் நிறுவன அதிகாரிகள் எடுத்துச் சென்றனர். அதன் முடிவுகளை அறிந்த பின்பு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago