சாஸ்த்ரா - சிங்கப்பூர் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் :

By செய்திப்பிரிவு

தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழம், சிங்கப்பூர் கேன்டியர் சிஸ்டம்ஸ் நிறுவனத்துடன் நேற்று முன்தினம் கூட்டு ஆராய்ச்சி மற்றும் தயாரிப்பு மேம்பாட்டுக்காக புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

சாஸ்த்ராவின் பதிவாளர் ஆர்.சந்திரமவுலி மற்றும் கேன்டியர் சிஸ்டம்ஸ் வியூகம் மற்றும் வணிக மேம்பாடு தலைவர் ரவிராமராவ் ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை பரிமாறிக்கொண்டனர்.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, சாஸ்த்ராவில் உள்ள கணினியல் புலத்தில் சாஸ்த்ரா - கேன்டியர் சிறப்பு மையம் நிறுவப்பட்டுள்ளது. இன்டஸ்ட்ரியல் இன்டர்நெட் ஆஃப் திங்ஸ், செயற்கை நுண்ணறிவு, கணிப்பொறி கற்றல், உற்பத்தி நிறுவன தீர்வுகள் மற்றும் அவற்றின் ஒருங்கிணைப்பு, தரவு பகுப்பாய்வு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் இந்த சிறப்பு மையம் கவனம் செலுத்தும்.

மேலும் இந்த சிறப்பு மையம் ஸ்மார்ட் அண்ட் டிஜிட்டல் உற்பத்திக்கான அனுபவ மையத்தை நிறுவுவதில் இணைந்து செயல்படும்.

நிகழ்ச்சியில், இயக்குநர் மற்றும் சிஎம்ஐஓ ரவிசங்கர் ராமகிருஷ்ணன், தலைமை மென்பொருள் கட்டிடக் கலைஞர் நல்லபெருமாள், சாஸ்த்ராவின் புலத்தலைவர்கள், மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்