தி.மலையில் நிதி நிறுவனத்தில் திருட முயற்சி :

By செய்திப்பிரிவு

திருவண்ணாமலையில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தின் இரும்பு ஷட்டர் கதவை திறக்கும் முயற்சி தோல்வி அடைந்ததால் ரூ.1.34 லட்சம் தப்பியது.

திருவண்ணாமலை அண்ணா நுழைவு வாயில் அருகே வேலூர் சாலையில் தனியார் நிதி நிறுவனம் இயங்கி வருகிறது. பணி முடிந்த பிறகு, நிறுவனத்தின் இரும்பு ஷட்டர் கதவை மூடிவிட்டு அலுவலர்கள் நேற்று முன்தினம் வீட்டுக்கு சென்றுள்ளனர். இந்நிலையில், ஷட்டர் கதவை வெல்டிங் மூலம் திறப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று இருப்பது நேற்று காலை தெரியவந்தது.

இதுகுறித்து தகவலறிந்து சென்ற தனியார் நிதி நிறுவன மேலாளர் தமிழரசு, நிதி நிறுவனத்தின் ஷட்டர் கதவு திறக்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டார்.

இதையடுத்து அவர் கொடுத்த தகவலின் பேரில், திருவண்ணாமலை கிழக்கு காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

அதில், இரும்பு ஷட்டர் கதவை திறக்கும் மர்ம நபர்களின் முயற்சி தோல்வி அடைந்ததால், நிதி நிறுவனத்தில் இருந்த ரூ.1,34,620 தப்பியது தெரியவந்ததுள்ளது.

இது குறித்து திருவண் ணாமலை கிழக்கு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்