சந்தனமரத்தை : வெட்டிய இருவர் கைது :

By செய்திப்பிரிவு

வேலூர் சத்துவாச்சாரி மேல் செங்காநத்தம் பகுதியில் சாலையோரம் வளர்ந்திருந்த சந்தனமரம் ஒன்றை மர்ம நபர்கள் நேற்று முன்தினம் அறுத்துள்ளனர். அப்போது, அவ் வழியாகச் சென்ற அதே பகுதியைச் சேர்ந்த இளங்கோ உள்ளிட்ட சிலர் இதைப் பார்த்து இருவரையும் பிடித்து சத்துவாச்சாரி காவல் துறையினரிடம் ஒப்படைத் தனர். விசாரணையில், அவர்கள் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுதாகர் (45), சாம்ராஜ் (43) என தெரியவந்தது.

இதையடுத்து, வனத்துறையினர் வசம் ஒப்படைக்கப்பட்ட இரு வரையும் சந்தனமரம் கடத்தல் வழக்கு தொடர்பாக வனத்துறை யினர் கைது செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்