வேலூர் கோட்டை ஜலகண்டேஸ் வரர் கோயிலில் 11 நாட்களுக்குப் பிறகு பக்தர்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்பட்டனர்.
வேலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பாதிப்பால் கன மழை பதிவானதால் வேலூர் கோட்டை அகழியில் சுமார் 30 அடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கியுள்ளது. இதன் காரணமாக ஜலகண்டேஸ்வரர் கோயிலில் இருந்து தண்ணீர் வெளியேறாமல் தேங்கியது. இதன் காரணமாக கடந்த மாதம் 30-ம் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டது.
கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கோயிலில் தேங்கிய தண்ணீர் மோட்டார் மூலம் வெளியேற்றப்பட்ட நிலையில் நேற்று காலை முதல் பக்தர்கள் தரிசனத்துக்காக 11 நாட்களுக்குப் பிறகு அனுமதிக்கப்பட்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago