கோவை, திருப்பூர் மாவட்டங்களில் இன்று கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடக்கிறது.
தமிழகத்தில் 14-ம் கட்ட மாபெரும் தடுப்பூசி முகாம் இன்று (டிச.11) நடைபெறுகிறது. கோவை மாவட்டத்தில் 729 மையங்களிலும், மாநகராட்சி பகுதிகளில் 299 மையங்களிலும் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை முகாம் நடைபெறும்.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கராநேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், “மாநகராட்சி பகுதிகளில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 1.15 லட்சம் பேர் இதுவரை முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமல் உள்ளனர். மேலும், 2.68 லட்சம் பேர் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள தகுதியுடையவர்களாக உள்ளனர். அனைவரும் இந்த முகாமை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி
திருப்பூர் மாவட்டத்தில் இன்றுநடைபெறவுள்ள சிறப்பு முகாமில்,ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசிசெலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக திருப்பூர் ஆட்சியர் சு.வினீத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: திருப்பூர் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் 19 லட்சத்து 95 ஆயிரத்து300 பேர் உள்ளனர். இதுவரை 17 லட்சத்து 69 ஆயிரத்து 21 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும் 2 லட்சத்து 26 ஆயிரத்து 679 பேருக்கு முதல் தவணையும்,5 லட்சத்து 16 ஆயிரத்து 820 பேருக்கு 2-ம் தவணையும் தடுப்பூசி செலுத்த வேண்டியுள்ளது. இன்று (டிச.11) 14-வது கட்ட சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. இதில் ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. 648 நிலையான முகாம்கள், 41 நடமாடும் முகாம்கள் என மொத்தம் 689 மையங்களில் காலை9 மணி முதல் மாலை 5 மணி வரை இம்முகாம் நடைபெறுகிறது.
அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள்,துணை சுகாதார நிலையங்கள்,ஊட்டச்சத்து மையங்கள், பள்ளிகள், ஊராட்சி அலுவலகங்கள், ரயில் நிலையங்கள், பேருந்துநிலையங்கள், சுங்கச்சாவடிகளில் முகாம் நடைபெறுகிறது. இந்த பணிகளில் துறை சார்ந்த 2,756 பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபட உள்ளனர். இந்தவாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக்கொண்டு, தடுப்பூசிசெலுத்திக்கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago