பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, திருப்பூரில் டிசம்பர் 10-ம் தேதி (நேற்று) மதியம் 12 மணி முதல் 12.10 வரை 10 நிமிடங்கள் சாலையில் வாகனங்களை நிறுத்தும் போராட்டம் நடைபெறும் என தொழிற்சங்கத்தினர் அறிவித்திருந்தனர்.
அதன்படி நேற்று சிஐடியு தொழிற்சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்துஇந்திய ஜனநாயக மாதர் சங்கம்,மாணவர் சங்கம், தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம், தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனம், தமிழ்நாடு சாலை போக்குவரத்து தொழிலாளர்கள் சம்மேளனம் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கத்தினர், திருப்பூர் எஸ்.ஏ.பி. திரையரங்கம் சாலை, பாண்டியன்நகர், மாநகராட்சி அலுவலகம் முன்பு, வீரபாண்டி, தாராபுரம் சாலை ஆகிய 5 இடங்களில் வாகனங்களை நிறுத்திபோராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது மத்திய அரசைக் கண்டித்தும், பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்க வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பினர். இதில் சிஐடியு மாவட்டத் தலைவர் உன்னி கிருஷ்ணன், மாவட்டச் செயலாளர் ரங்கராஜ், சாலையோர வியாபாரிகள் சங்க செயலாளர் பாலன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் ஞானசேகர் உட்பட பலர் பங்கேற்றனர்.
நீலகிரி
மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உதகை சேரிங்கிராஸ் காந்தி சிலை அருகே சிஐடியு தொழிற்சங்கத்தினர் நேற்று வாகனங்களை சாலையில் நிறுத்திபோராட்டத்தில் ஈடுபட்டனர். சிஐடியு மாவட்டப் பொருளாளர் நவீன் சந்திரன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ஆர். ரமேஷ், நகராட்சி தொழிலாளர்கள் சங்கத் தலைவர் சங்கரலிங்கம் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். தொழிற்சங்க நிர்வாகிகள் எஸ்.பி.டி ராஜரத்தினம், சாஸ்தாமணிகண்டன், கட்டுமான சங்கத்தை சார்ந்த கண்ணன், புட்டுசாமி, சுரேஷ்உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago