திருப்பூரில் இன்று லோக்அதாலத் :

By செய்திப்பிரிவு

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் சு.வினீத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழக சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் உத்தரவின்பேரில் திருப்பூர் முதன்மை மாவட்டநீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான ஸ்வர்ணம் ஜெ. நடராஜன்வழிகாட்டுதல்படி, இன்று (டிச.11) தேசிய மக்கள் நீதிமன்ற நிகழ்வு (லோக்அதாலத்) திருப்பூர் மாவட்டம்முழுவதும் உள்ள நீதிமன்ற வளாகங்களில் காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.

இதில் திருப்பூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் 9 அமர்வுகளும், அவிநாசியில் 2, காங்கயத்தில் 2, உடுமலையில் 2, தாராபுரத்தில் 2, பல்லடத்தில் 2 என 19 அமர்வுகளாக லோக்அதாலத் நடைபெற உள்ளது. மோட்டார் வாகன விபத்துவழக்குகள் 273, சிவில் வழக்குகள் 435, காசோலை மோசடி வழக்குகள் 608, குடும்ப நல வழக்குகள் 101, சமரசத்துக்கு உட்பட்ட குற்ற வழக்குகள் 972 மற்றும் வங்கி வாராக்கடன் வழக்குகள் 100 என மொத்தம் 2,489 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன, என குறிப்பிட்டுள்ளார்.

அவிநாசி வட்ட சட்டப்பணிகள்குழு சார்பில் நேற்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘அவிநாசிசார்பு நீதிமன்ற வளாகத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது. அவிநாசி சார்பு நீதிமன்றவழக்கு கோப்புகள், அவிநாசி மாவட்ட உரிமையியல் நீதிமன்றவழக்கு கோப்புகள் மற்றும் ஊத்துக்குளி மாவட்ட உரிமையியல் மற்றும்குற்றவியல் வழக்கு நீதிமன்றவழக்கு கோப்புகள் ஆகியவற்றுக்குசமாதான முறையில் தீர்வு காணப்பட உள்ளன. இந்த வாய்ப்பை வழக்கறிஞர்களும், மனுதாரர்களும் பயன்படுத்திக்கொள்ளலாம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல, உடுமலையில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் வட்ட சட்டப் பணிகள் குழு தலைவர்நீதிபதி எம்.மணிகண்டன் முன்னிலையில், தேசிய மக்கள் நீதிமன்றம்நடைபெறும். தாராபுரத்தில் உள்ள நீதிமன்ற வளாகத்திலும் மக்கள் நீதிமன்றம் நடைபெறும். இதில் மோட்டார் வாகன விபத்து வழக்குகள், சிவில் வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், குடும்ப நல வழக்குகள், சமரசத்துக்குரிய குற்றவழக்குகள் உள்ளிட்ட வழக்குகளுக்கு சமரச தீர்வின் அடிப்படையில் விசாரணைக்கு ஏற்கப்பட்டு,தீர்ப்புகள் வழங்கப்படும் என வட்ட சட்டப் பணிகள் குழுவினர் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்