வேளாண் இடுபொருள் மையம் மலைச்சந்து கிராமத்தில் தொடக்கம் :

மலைச்சந்து கிராமத்தில் வேளாண் இடுபொருள் மையத்தை அமைச்சர் தொடங்கி வைத்தார்.

தமிழக அரசின் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை மூலம் 300 மாவிவசாயிகள் ஒன்றிணைந்து மா உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் தொடங்கி உள்ளனர். இந்த நிறுவனம் மூலம் வேளாண்மைத் துறை வழிக்காட்டுதலின்படி விவசாயிகள் பயன்பெறும் வகையில் வேளாண் இடு பொருள் மையத்தை கிருஷ்ணகிரி - ராயக்கோட்டை சாலையில் உள்ள மலைச்சந்து கிராமத்தில் தொடங்கி உள்ளனர். இங்கு விவசாயி களுக்கு தேவையான விதை, உரம், பூச்சி மருந்து மொத்தமாகவும், சில்லரையாகவும் விற் பனை செய்யப்படுகிறது. விற்பனை நிலையத்தை கதர் மற்றும் கைத்தறித் துறை அமைச்சர் காந்தி நேற்று திறந்து வைத்தார். முதல் விற்பனையையும் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் ஆட் சியர் ஜெயசந்திர பானு ரெட்டி, முன்னாள் எம்எல்ஏ செங்குட்டுவன், நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் தமிழ்செல்வன், ஒன்றிய செயலாளர்கள் கோவிந்தசாமி, கோவிந்தன், தனசேகரன் உட்பட 10 இயக்குநர்கள், விவசாயி கள் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்