விளையாட்டு மைதானம் கேட்டு கருத்துரு :

By செய்திப்பிரிவு

காஞ்சிபுரம் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து, செங்கல்பட்டை தலைமையிடமாகக் கொண்டு 37-வது புதிய மாவட்டம் கடந்த 2019-ம் ஆண்டு நவ.29-ம் தேதி உருவாக்கப்பட்டது. ஆட்சியர் அலுவலகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், நீதிமன்றம் கட்ட இடம் ஒதுக்கப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதேபோல், மாவட்ட விளையாட்டு மைதானம் அமைக்க 10 ஏக்கர் நிலம் ஆட்சியர் அலுவலகம் அருகே ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் உள் விளையாட்டு அரங்கம் அமைக்க செங்கல்பட்டில் கால்நடை மருத்துவமனை அருகில் 2 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதுதவிர, நவீன விளையாட்டு மைதானம் அமைக்க ரூ. 30 கோடி தேவை என அரசுக்கு கருத்துருவை பொதுப்பணித் துறையினர் அனுப்பியுள்ளனர்.

இதுகுறித்து பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறும்போது, “10 ஏக்கர் நிலம் ஆட்சியர் அலுவலகம் அருகே ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு 400 மீட்டர் ஓடுதளம், கால்பந்து மைதானம், கைப்பந்து, கூடைப்பந்து, கபடி மற்றும் தடகள போட்டிகள் நடத்துவதற்கு ஏற்ற மைதானங்கள் அமைக்கப்படவுள்ளன. மேலும் 2 ஏக்கரில் உள் விளையாட்டு அரங்கம் அமைக்கப்படவுள்ளது. இதற்காக திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. ஆண்கள், பெண்களுக்கென தனித்தனி விடுதிகள் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அரசு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டவுடன் விளையாட்டுத் திடல் அமைக்கப்படும்” என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்