மண்டபத்தில் தாய், மகள் கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடி விசாரிக்கக்கோரி இறந்தவரின் மற்றொரு மகள் மற்றும் உறவினர்கள் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.
மண்டபம் ரயில்வே குடி யிருப்பில் காளியம்மாள் (58), அவரது மகள் மணிமேகலை (33) ஆகியோர் எரித்துக் கொலை செய்யப்பட்டு, நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இதுதொடர்பாக மண்டபம் இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் வசித்துவரும் சசிக்குமார் (35), ராஜ்குமார் (30) ஆகியோரை மண்டபம் போலீஸார் கைது செய் தனர்.
இந்நிலையில் காளியம்மாளின் மூத்த மகள் சண்முக ப்ரியா மற்றும் உறவினர்கள், தமிழ்ப் புலிகள், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சியினர், இவ்வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசார ணைக்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தி ஆட்சியர் சங்கர்லால் குமாவத்திடம் மனு அளித்தனர்.
அப்போது தமிழ்ப்புலிகள் கட்சியின் மாநிலச் செயலாளர் பேரறிவாளன், மாவட்டச் செய லாளர் தமிழ்முருகன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில செயலாளர் போஸ், மாவட்டச் செயலாளர் விடுதலை சேகரன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டச் செயலாளர் கலையரசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதுகுறித்து சண்முகப்பிரியா செய்தியாளர்களிடம் கூறிய தாவது: எனது தாய், தங்கை எரித்துக் கொலை செய்யப்பட்டு அவர்கள் அணிந்திருந்த 25 பவுன் நகைகள், பீரோவில் இருந்த ரூ.3.50 லட்சம் பணம் கொள்ளையடிக் கப்பட்டுள்ளது. இதில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒருவரைத் தேடி வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக ராமேசுவரம் உதவி காவல் கண்காணிப்பாளரை சந்தித்து கேட்டபோது, கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர்தான் குற்றவாளி, மற்ற வர்கள் ஈடுபடவில்லை என முன்னுக்குப்பின் முரணாக கூறி னார் என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago