தூத்துக்குடி அரசு தொழிற்பயிற்சி நிலைய துணை இயக்குனர் எஸ்.பழனி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் செயல்பட்டுவரும் தூத்துக்குடி மாவட்ட அரசினர் தொழிற் பயிற்சி நிலையங்களான தூத்துக்குடி, திருச்செந்தூர், வேப்பலோடை, நாகலாபுரம் தொழிற்பயிற்சி நிலையங்களில் உள்ள காலியிடங்களை நிரப்பும் வகையில் நேரடி மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் வரும் 31.12.2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விரும்புவோர் 8-ம் வகுப்பு அல்லது 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், சாதிச்சான்றிதழ், 5 பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஆதார் கார்டு, அசல் சான்றிதழ்களின் நகல்கள் ஆகியவற்றுடன் தூத்துக்குடி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரில் வந்து விண்ணப்பிக்கலாம்.
அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் சேரும் பயிற்சியாளர்களுக்கு மாதம் தோறும் உதவித்தொகைரூ.750, இலவச பேருந்து பயண சலுகை, பாடப்புத்தகம், லேப்டாப், வரைபடக்கருவிகள், சீருடை, காலனி, பயிற்சிக்கு தேவையான பொருட்கள் வழங்கப்படுகின்றன. மேலும் விவரங்களுக்கு தூத்துக்குடி தொழிற்பயிற்சி நிலைய துணை இயக்குநரை 0461-2340133 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago